சுப்ரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1773 days ago
அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் அருகே பண்ணைகுடியில் ஸ்ரீசெல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.அக்.,24 கணபதி ஹோமம் முதல்கால யாக பூஜைகள் துவங்கியது.நேற்று காலை சிவாச்சாரியார் கல்யாணசுந்தரம் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.