உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில் வேத பாடசாலை துவக்க விழா!

யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில் வேத பாடசாலை துவக்க விழா!

திருக்கோவிலூர் : திருவண்ணாமலை, பகவான் யோகி ராம் சுரத்குமார் ஆசிரம, கும்பாபிஷேகத்தின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு, 11 கலசங்கள், ஸ்தாபனம் செய்யப்பட்டு, ஏகாதச ருத்ர ஜபம் செய்யப்பட்டது. மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், சோடசோபச்சார தீபாராதனை நடந்தது. நித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில், பண்டிட்கள் மூலஸ்தானம் மற்றும் வேத பாடசாலையில், வேத பாராயணம் செய்தனர். இதையடுத்து, பக்தர்கள் பஜனையும், மாலை 4 மணிக்கு, யோகி ராம் சுரத்குமார் வித்யாலயா மாணவ, மாணவியரின் நாடகமும் நடந்தது. மாலை 5.15 மணிக்கு, முரளீதர சுவாமிகள், பகவான் யோகி ராம் சுரத்குமார் உற்சவ மூர்த்திக்கு, தங்கக் கிரீடம் அணிவித்தார். தொடர்ந்து வேத பாடசாலையை திறந்து வைத்து, மாணவர்களுக்கு ரிக் வேத உபதேசம் , பத்ராசல ராமதாசர் சரித்திர உபன்யாசம் நடந்தது. இரவு 8.15 மணிக்கு, ஆஸ்ரம வளாகத்தில், பகவான் வெள்ளி ரத உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஜஸ்டிஸ் அருணாசலம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !