உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

சித்தி விநாயகர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

சேலம்: தேய்பிறை அஷ்டமியையொட்டி, சேலம் டவுன் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அங்குள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட, 16 வகை பொருட்களால் அபி?ஷகம் செய்து, செவ்வரளி பூக்கள், வடை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. கால பைரவர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தலைவாசல், ஆறகளூரில் உள்ள, காமநாதீஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட, 16 வகை அபிஷேக பூஜை செய்யப்பட்டது. வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் கால பைரவர் அருள்பாலித்தார். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன், கை.புதூர் ராஜகணபதி, சென்னகிரி மருந்தீசர், ஆத்தூர் கைலாசநாதர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர் கோவில்களில், கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !