மேட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :1477 days ago
இடைப்பாடி: இடைப்பாடி, மேட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த, 26ல் கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர்.
தொடர்ந்து, ஐந்து கால பூஜை தொடங்கி, நேற்று நிறைவடைந்தது. பின், பல்வேறு புண்ய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை, கோபுர கலசங்கள் மீது குருக்கள் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பக்தர்கள் மீதும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மாரியம்மன் தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.