இலவசம் அன்பை முறிக்கும்
ADDED :1471 days ago
துருக்கி அரசர் ஒருவர் முல்லாவையும், சமையற் குழுவையும் வேட்டையாட அழைத்துச் சென்றார். சமையல் செய்யும்போதுதான் உப்பு எடுத்துவரவில்லை என தெரிந்தது. உடனே அரசர், அருகில் உள்ள கிராமத்தில் இருந்து உப்பு கொண்டுவருமாறு கட்டளையிட்டார்.
அப்போது முல்லா, ‘அரசரே... மக்களிடம் இலவசமாக உப்பை கேட்காதீர். அது உங்களது பெயரை கெடுக்கும்’ என்றார்.
‘அது எப்படி’ எனக்கேட்டார் அரசர்.
‘தங்களுக்கு அன்பளிப்பாக ஒரு மூடை உப்பைக்கூட கொடுப்பார்கள். அது வேறு விஷயம். உப்பு மலிவான பொருள். அதுகூடவா உங்களிடம் இல்லை என கேலி செய்வார்கள். அதனால் உங்களின் மரியாதை போய்விடும்’ என்றார்.
இப்படித்தான் நம்மில் பலர், அக்கம்பக்கத்தினரிடம் உப்பு, புளி, மிளகு என சிலவற்றை கேட்போம். அவர்களும் நம் மீதுள்ள அன்பால் தருவார்கள். இதுவே பழக்கமானால் உங்களது மரியதை கெடும்.