வேண்டாமே விவாதம்
ADDED :1471 days ago
சிலர் பேருந்து, ரயிலில் பயணிக்கும்போது, ‘ஜன்னலோர சீட்டுத்தான் வேண்டும்’ என விவாதம் செய்வர். இதனால் யாருக்காவது பயன் உண்டா...
ஒருமுறை தோழர்கள் சிலர் விவாதத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வது தான் சரி என பிடிவாதம் பிடித்தனர். இதைக் கேட்ட நாயகம், ‘வீண் தர்க்கம் செய்யாதீர்கள். அப்படி செய்தால் குழப்பமே மிஞ்சும்’ என்றார். இதைக்கேட்டு தாங்கள் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டனர். இனியாவது குழந்தைத்தனமாக வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருங்கள்.