உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தமாக இருப்பவர்

ஆனந்தமாக இருப்பவர்


* நந்தி என்பதற்கு ‘எப்போதும் ஆனந்தமாக இருப்பவர்’ என்பது பொருள். சிவனின் காவலராக இருக்கும் இவர், கண் இமைக்காமல் சிவனையே தரிசிப்பதால் ஆனந்தமுடன் இருக்கிறார்.
* தமிழகத்தின் பெரிய நந்தி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ளது என நினைப்பீர்கள். ஆனால் மயிலாடுதுறையில் இருந்து 14 கி.மீ., துாரத்திலுள்ள திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் நந்தி தான் மிகப் பெரியது.
* பிரதோஷ வேளையான மாலை 4:30- 6:00 மணி  துஷ்ட சக்திகள்  நடமாடும். இந்நேரத்தில் சிவன் மீது கொண்ட அன்பின் காரணமாக தன் இரு கொம்புக்கும் நடுவில் சிவனை நிற்க வைத்து பாதுகாக்கிறார். அந்த மகிழ்வில் சிவன் நடனமாடுகிறார்.
* பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியை இடைவிடாமல் செய்பவர் நந்தீஸ்வரர். இவர் தன் நாக்கை வளைத்து மூக்கில் வைத்து மூச்சை அடக்குவதால் மனம் ஒருமுகப்பட்டு சிவ சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்.
* வயலை உழுவது, வண்டி இழுப்பது என கஷ்டமான பணியில் ஈடுபடுவது காளை. விவசாயி அடித்தாலும் பொறுமையுடன் தாங்கும். துன்பத்தை பொறுத்துக் கொண்டு மனிதன் அக்கறையுடன் பணிசெய்வதே நந்தி தரும் பாடம்.
* பக்தர்களில் சிலர் நந்தியின் காதில் தங்களின் குறைகளைச் சொல்லி வழிபடுவர். மனம், உடல் துாய்மை மிக்கவர்கள்,  மந்திர தீட்சை பெற்றவர்கள் மட்டும் கோயில் சிலையைத் தொடும் உரிமை உண்டு. நந்தியை தொடாமல் மனதார வழிபட்டாலே குறை நீங்கும்.
* மூளையிலுள்ள ‘பினியல் கிளாண்ட்’ என்னும் சுரப்பியை ‘நந்தி’ எனக் குறிப்பிடுவர். சிந்தனையைத் துாண்டும் சக்தி இதற்குண்டு. மந்தமானவர்களுக்கு இச்சுரப்பியில் போதுமான திரவம் இருக்காது. திங்கட்கிழமைகளில் நந்திக்கு அருகம்புல் சாத்தி வழிபட்டால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !