சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் தேய்பிறை பிரதோஷம்
ADDED :1756 days ago
சின்னாளபட்டி : தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு,, சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.