கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கணும்
ADDED :1472 days ago
சாணார்பட்டி : சாணார்பட்டி ஆவிளிபட்டியில் பூஜாரிகள் பேரமைப்பு சிறப்பு கூட்டம் நடந்தது.
மாநில இணைச் செயலாளர் உதயகுமார் சிவாச்சாரியார் தலைமை வகித்தார். மாவட்ட இணைத் தலைவர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் சந்தோஷ் வரவேற்றார். முன்னதாக, ஆதிசுயம்பு ஈஸ்வரர் அபிராமியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய தங்க நகையை உருக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். வருவாய் இல்லாத கோயில்களில் பூஜை செய்யும் பூஜாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை, வீடுகளை போல் கோயில்களுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினர். பொருளாளர் முத்துச்சாமி நன்றி கூறினார்.