கந்த சஷ்டி விரத தொடக்கம் பக்தர்கள் தரிசனம்
ADDED :1473 days ago
காரைக்குடி: காரைக்குடியில், கந்த சஷ்டி விரத தொடக்கத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதியான்கு கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி சஷ்டி திதி வரையான ஆறு நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி நேற்று கந்த சஷ்டி விரதம் நேற்று முதல் தொடங்கியது. கந்தசஷ்டி கவசத்தில் முன்னிட்டு நேற்று, குன்றக்குடி காரைக்குடி நகரச் சிவன் கோயில், செக்காலை சிவன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஆறாம் நாள் விழாவில் முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா நடைபெறும்.