உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம்மாள் கோயில் ஐப்பசி உற்சவ விழா

நாகம்மாள் கோயில் ஐப்பசி உற்சவ விழா

பாலமேடு: பாலமேடு அடுத்த கோபால்பட்டி அருகே வீர நாகம்மாள் கோயில் ஐப்பசி விழா மூன்று நாட்கள் நடந்தது.முதல்நாள் கிராம தெய்வங்களுக்கு பழங்கள் படைத்து கரகம் ஜோடிக்கப்பட்டது. அக்னி சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. காலை பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை சென்றார். நேற்று சக்தி கிடா வெட்டி பக்தர்கள் வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூஜாரிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !