கலைத்துறையில் சாதிக்க....
ADDED :4893 days ago
வெள்ளிக்கிழமை ராகு வேளையில் பைரவருக்கு சந்தனக்காப்பிட்டு ரோஜாமாலை சூட்டி சர்க்கரைப்பொங்கல், சேமியா பாயசம், மாம்பழம் படைத்து வழிபட கலைத்துறையில் சாதிக்கும் யோகம் உண்டாகும். சனிக்கிழமை ராகுகாலத்தில் (காலை9-10.30)பைரவருக்கு மல்லிகை மாலை அணிவித்து, எள் சாதம், திராட்சை, பால்பாயசம் படைத்து வழிபட்டால் விஷபயம் நீங்கும். செவ்வாய்க்கிழமை பைரவருக்கு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சை மாலை அணிவித்து, நெய்தீபமிட்டு, மாதுளம்பழம் படையலிட்டு வழிபட எதிரிகளால் உண்டாகும் துன்பம் நீங்கும். எதிர்ப்புகள் அகன்று வெற்றி வந்து சேரும்.