உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை தீப திருவிழா கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை தீப திருவிழா கொடியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை (10ல்) தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் தீப திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் முதல் நாள் விழாவாக தொடங்குகிறது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன், உற்சவர்  பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு  சிறப்பு அபி ேஷகம், பூஜை  செய்யப்பட்டு பஞ்ச மூர்த்திகள், சுவாமி தங்க கொடி மரம் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க,  63 அடி உயர  தங்க கொடி மரத்தில் காலை, 6:30 முதல், 7:25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடக்கும். காலை, 9:00 மணி வரை பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.  வரும், 19ல்,   அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00, மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. வரும், 17 முதல், 20 வரை பவுர்ணமி மற்றும் மஹா தீபத்தன்று கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை மீது ஏறி சென்று மஹா தீபம் தரிசனம் காணவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !