திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நேற்று உற்சவர் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.
திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. விழாவில் நேற்று அதிகாலை மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அரக்கோணம் சாலையில் உள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக உற்சவர் சண்முகப் பெருமாள் காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து மாலையில் சண்முகப் பெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனை நடைபெற்றது. புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் இணைத்தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.