நாகசதுர்த்தி விழா: பெண்கள் வழிபாடு
திருத்தணி: நாகசதுர்த்தி விழா ஓட்டி தொடர்மழையிலும் திரளான பெண்கள் பாம்பு புற்றிற்கு பால், முட்டை ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். தீபாவளி பண்டிகை முடிந்து, 5-ம் நாளில், நாகசதுர்த்தி விழா கொண்டாட ப்படுகிறது. அந்த வகையில் திருத்தணியில் கங்கையம்மன், நல்ல தண்ணீர் குளக்கரை நாகவள்ளி,,படவேட்டம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களில் நாகசதுர்த்தி விழா தொடர் மழையிலும் திரளான பெண்கள், அங்குள்ள புற்றில் முட்டை, பால் ஊற்றி, சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். அதே போல் ராமகிருஷ்ணாபுரம் தேசம்மன் கோவில், மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் கோவிலிலும் பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்தும், பால், முட்டை புற்றில் ஊற்றி வழிப்பட்டனர்.கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் சத்திரம் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் நாகசதுர்த்தி விழா நேற்று நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு கணபதி ேஹாமமும் அதனை தொடர்ந்து பால்குட ஊர்வலமும், அம்மனுக்கு பாலாபிேஷகமும் மறறும் சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு நாகத்தம்மன் திருவீதியுலா நடந்தது. இதே போல், ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரி, அம்மையார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று நாகாலம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நாகாலம்மனுக்கு, பால், முட்டை, எள், முளைவிட்ட கம்பு உள்ளிட்டவை படைக்கப்பட்டன. பள்ளிப்பட்டு நாகாலம்மன் கோவிலில் நேற்று காலை முதல் மாலை திரளான பெண்கள், நாகாலம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினர்.