குபேர விநாயகர் கோவிலில் ஆண்டு விழா
ADDED :1527 days ago
சூலூர்: சுல்தான்பேட்டை குமரன் நகர் குபேர விநாயகர் கோவிலில் ஆண்டு விழா நடந்தது. சுல்தான்பேட்டை குமரன் நகர் குபேர விநாயகர் கோவில் பழமையானது. இங்கு, ஆறாம் ஆண்டு விழாவை ஒட்டி, சிறப்பு கணபதி ஹோமம், அபிஷேக, அலங்கார பூஜைகள் நேற்று நடந்தன. தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். குபேர விநாயகர் கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம், பக்தர்களை பரவசப்படுத்தியது.