கூடலூர் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம்
ADDED :1531 days ago
கூடலூர்: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கூடலூர் சுந்தரவேலவர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. சுந்தரவேலவருக்கு வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாணத்தை உமா மகேஸ்வர சிவாச்சாரியார் சுவாமிகள் நடத்தி வைத்தார். சஷ்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண பாடல்களைப் பாடினர். பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தர வேலவர் கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.