கடலைக்காய் திருவிழாவரும் 29ல் துவக்கம்
பசவனகுடி: பெங்களூரு பசவனகுடியில் நடக்கும், வரலாற்று பிரசித்தி பெற்ற கடலைக்காய் திருவிழாவுக்கு மாநகராட்சி அனுமதியளித்துள்ளது. வரும் 29 முதல் மூன்று நாட்கள் இந்த திருவிழா நடக்கிறது.ஆண்டு தோறும் கன்னட கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட் கிழமை பெங்களூரு பசவனகுடியின், புல் டெம்பிள் சாலையில், தொட்ட கணபதி கோவில் வளாகத்தில், கடலைக்காய் திருவிழா நடப்பது வழக்கம். இந்த திருவிழாவுக்கு, 500 ஆண்டு வரலாறு உள்ளது. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகள், தமிழகம், ஆந்திரா என வெளி மாநிலங்களின் விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்பர். லட்சக்கணக்கான மக்கள் வருவர்.கொரோனா காரணமாக கடந்த ஆண்டில் கோவிலுக்குள் மட்டும் நடத்தப்பட்டது. இம்முறை கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் 29 முதல், மூன்று நாட்கள் திருவிழா நடத்த, பெங்களூரு மாநகராட்சி அனுமதியளித்துள்ளது.இரண்டு நாட்களுக்கு முன்பே கடைகள் திறக்கப்படும். பல்வேறு வகையான கடலைக்காய்கள் இதில் இடம் பெறும்.தொட்ட கணபதி சாலையிலிருந்து ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் சதுக்கம் வரை கடைகள் திறந்திருக்கும். மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு வாங்கலாம். கொரோனா முன்னெச்சரிக்கையுடன் நடத்தப்படும். தொட்ட கணபதி கோவில், சாலைகளின் இரண்டு ஓரங்களிலும், மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.