திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: 2ம் நாள்
ADDED :1468 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழா துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாவது நாள் காலை உற்சவத்தில், ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்த உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபவிழா 10வது நாளில் 2668, அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில், மகா தீபம் ஏற்றுவதற்கு, ராட்சத கொப்பரைக்கு தேவைப்படும் தீபம் நெய், காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.