உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்: நவ.19ல் மலைமேல் மகா தீபம்

திருப்பரங்குன்றம் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்: நவ.19ல் மலைமேல் மகா தீபம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று காலை பல்லக்கில் கொடிப்பட்டம் வைத்து திருவாட்சி மண்டபத்தை வலம் சென்று கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது. சுவாமி, தெய்வானை எழுந்தருள சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். பின் கம்பத்திற்கு திரவிய அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது.வழக்கமாக திருவிழா நாட்களில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு கொரோனா தடை உத்தரவால் காலை, மாலையில் படிச்சட்டத்தில் சுவாமி, தெய்வானை கோயிலுக்குள் புறப்பாடாகின்றனர். நவ.,18ல் பட்டாபிஷேகம், 19ல் மலைமேல் மகா தீபம், 20ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !