கமுதி அருகே தீப்பந்தம் ஏந்தி விநோத வழிபாடு
ADDED :1468 days ago
கமுதி : கமுதி அருகே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.கமுதி அருகே நாராயணபுரம்,கல்லுப்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கண்ணார்பட்டி கிராமத்தில் செய்யப்பட்ட முத்தாலம்மன் அம்மன்சிலை கண்ணைக்கட்டி ஊர்வலமாக கமுதி பஸ்ஸ்டாண்ட் வழியாக நாராயணபுரம், கல்லுப்பட்டி துாக்கி சென்றனர். ஊர்வலத்தின் போது ஏராளமான இளைஞர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி அம்மன் சிலை பின்பு ஊர்வலமாக சென்றனர். பின்னர் முத்தாலம்மன் கண்கள் திறக்கப்பட்டு சிறப்புபூஜை நடந்தது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமை மாறாமல் தீப்பந்தம் வெளிச்சத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை காண கமுதி சுற்றியுள்ள பொதுமக்கள் பலரும் குவிந்தனர்.