உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்குறுங்குடி கோயிலில் திருமங்கை ஆழ்வார் உற்சவம் துவக்கம்

திருக்குறுங்குடி கோயிலில் திருமங்கை ஆழ்வார் உற்சவம் துவக்கம்

திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் 2ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது. உற்சவ நாட்களில் காலையில் பெருமாள் , தாயாருக்கு அபிஷேகம், அலங்கார தீபாரதனை, பூஜைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு ராமனுஜ ஜீயர் முன்னிலையில், பாராயணங்கள், திவ்ய பிரபந்தங்கள். ஊஞ்சல் பாட்டு படித்தல் நடந்தது. மாலையில் அழகிய நம்பிராயர் ருமாள் தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் திருமங்கை ஆழ்வார் உற்சவம் நேற்று துவங்கியது. 19ம் தேதி வரை , 10 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் சிவசங்கரன் தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் ஜீயர் மட ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !