திருவண்ணாமலை தீப விழா 3ம் நாள்: 1008 சங்கு அபிஷேகம்
ADDED :1743 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் மூன்றாம் நாள் காலை உற்சவத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ராஜகோபும் முன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தீப விழாவில் மூன்றாம் நாளில் உலக நன்மைக்காக சுவாமி சன்னதி முன் 1008 சங்கு அபிஷேக சிறப்பு யாக பூஜை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரம் அருகே வெள்ளி உண்டியல் (பிராத்தனை உண்டியல்) வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.