ஹஜ் புனித பயணத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு
சென்னை:தமிழகத்தில் இருந்து அடுத்த ஆண்டு, ஹஜ் பயணம் செல்ல விரும்பும் முஸ்லிம்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் செயல்முறை, இம்மாதம் 1ம் தேதி ஆன்லைனில் துவங்கியது; 31ம் தேதி முடிகிறது. விண்ணப்பதாரர்கள், 2022ல் புறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன், அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின், இரண்டு டோஸ்களும் செலுத்தியிருக்க வேண்டும். இந்திய ஹஜ் குழு இணையதளம், www.hajcommittee.gov.in வழியாக அல்லது இந்திய ஹஜ் குழுவின், KCOL என்ற மொபைல் ஆப் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன், விண்ணப்பதாரர் வழிகாட்டுதல் உறுதிமொழியை கவனமாக கடைப்பிடிக்க வேண்டும். நபருக்கு, 300 ரூபாய் பதிவுக் கட்டணத்தை, ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 022 - 2210 7070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.