உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா

சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

குருத்தலங்களுல் கிழக்கு முகமாக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள ஒரே தலம் பட்டமங்கலம். இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியாக அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இன்று மாலை 6:21 மணிக்கு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்கிறார்.குருப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை 5:30 மணி முதல் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கியது. மூலவர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து ஆலமரத்தடியில் எழுந்தருளியுள்ள உற்ஸவருக்கு அர்ச்சனைகள் நடைபெற்றது. மதியம் நடை சாத்தப்படாமல் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை .6:21 மணிக்கு குருப்பெயர்ச்சி முடிந்தவுடன் ராஜகோபுரம், வடக்கு கோபுரம், மூலவர் விமானத்திற்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !