ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா: பரிகாரம் செய்து வழிபட்ட பக்தர்கள்
ADDED :1431 days ago
திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்று குருப் பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று மாலை 6.31 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, குரு பரிகார ஸ்தலமான திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவானுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தங்கக் கவசம் அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குருப் பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகியராசிக்காரர்கள் பரிகாரம் செய்து வழிபட்டனர்.