மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயில் குருபெயர்ச்சி விழா
மயிலாடுதுறை: மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயில் குரு பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்:-
நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்கின்றார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் புண்ணியம் அடைவதாக ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சரியாக 6.21க்கு இடம் பெயர்ந்தாh.; தனக்காரகன், புத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் குருபகவானை சிவாலயங்களில் இருக்கும் தெட்சிணாமூர்த்தி சன்னிதியில் வழிபாடு நடத்துவதன் மூலம் சிறப்பான பலன்களை அடையமுடியும். குரு பெயர்ச்சியை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில், தனி சந்நதியில் எழுந்தருளியுள்ள மேதா தெட்சினாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. உலக நன்மை, கொரோனா நோய் நீங்க, இயற்கை சீற்றம் வராமல் இருக்க வேண்டியும் பஞ்சமுக அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் தருமபுர ஆதின கட்டளை விசாரணை சிவகுருநாதன் மற்றும் சட்டநாதன் தம்பிரான்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.