50 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பிறவி எடுத்தல் திருவிழா
ADDED :1430 days ago
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகேயுள்ள கோணப்பட்டியில் அய்யனார் பிறவி எடுத்தல் கிராமிய திருவிழா நடைபெற்றது. இதற்கு முன் இத்திருவிழா 1974 ஆண்டு நடத்தப்பட்டது. அதன்பின் 48 ஆண்டுகள் கழித்து இத்திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. திருவிழாவில் அய்யனார், கருப்புசாமி, பழிஞ்சி அம்மன், நோட்டிசரோயன், கன்னிமார்கள் போன்ற 5 தெய்வங்களின் மண் சிலைகள் மற்றும் குதிரை, மாடு, நாய், நந்தி என 200 மண் சிலைகளைக் கொண்டு இத் திருவிழா கொண்டாடப்படுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் இரண்டாவது நாள் 200 சிலைகளுக்கும் கண்திறந்து பிறவி எடுத்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நல்ல மழை பெய்ய வேண்டும் மற்றும் ஊர் நன்மைக்காகவும் இத்திருவிழா கொண்டாடப்படுவதாக இப்போது மக்கள் கூறினர்.