மொரட்டாண்டி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், 12 அடி உயர குரு பகவான் சிலை உள்ளது. இங்கு, குரு பகவான் நேற்று மாலை 6:21 மணிக்கு மகர ராசியில் இருந்து, கும்பம் ராசிக்கு பிரவேசிக்கும், குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று மகா யாகம் மற்றும் லட்ச்சார்ச்சனை நடந்தது.காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகா லட்சுமி ஹோமம், 1,008 கொழுக்கட்டை நிவேத்தியம், 30 விதமான அபிேஷகம் நடந்தது.காலை 10:00 மணிக்கு குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், மகா பூர்ணஹூதி, ராசி பரிகார ஹோமம், 1,008 லிட்டர் பால் அபிேஷகமும், மாலை 3:00 மணிக்கு கலச அபிேஷகம் நடந்தது. சரியாக மாலை 6:21 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சிதம்பரம் குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்திருந்தனர்.