திருவண்ணாமலை அருணகிரிநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :1 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை ஸ்ரீ ஞானாம்பிகை சமேத அருணகிரிநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை நகரில் ராஜ கோபம் எதிரே உள்ள சன்னதி தெருவில் அருகேயுள்ள அய்யங்குளம் எதிரே அய்யங்குள அகராஹாரத் தெருவில் உள்ளது ஸ்ரீ அருணகிரி நாதர் திருக்கோயில். இக்கோயில் கும்பாபிஷேகம் விழாவில் நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு ேஹாமம், வழிபாடு நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகமாக நடைபெற்றது. இதில் காஞ்சிகாமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.