திருப்போரூர் பிரணவ மலை கைலாசநாதர் கோவிலில் தூய்மை பணி
ADDED :41 minutes ago
திருப்போரூர்; திருப்போரூர் பிரணவ மலை கைலாசநாதர் கோவிலில் தூய்மை பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. திருப்போரூர் பிரணவ மலையில் பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலில், தினமும் காலை, மாலை நேரங்களில், பூஜையுடன், மாதத்தில் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் சிவராத்திரி போன்ற முக்கிய விழாக்களும் நடத்தப்படுகிறது. இங்கு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வரும் 15ம் தேதி சிவராத்திரி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, பிரணவ மலை பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், தூய்மை பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. கோவில் வளாகப் பகுதியில், வளர்ந்திருந்த செடி, கொடிகளை பக்தர்கள் அகற்றி தூய்மைபடுத்தினர்.