பெருமாள் கோவிலில் இன்று வஸ்திரம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி
ADDED :1422 days ago
ஈரோடு: ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் இன்று கைசிக ஏகாதசியை முன்னிட்டு காலையில் திருமஞ்சனமும், மாலையில் கைசிக புராணம் பாடி, 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படும். அதன் பின் மாலை, 5:00 முதல், 8:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஏற்பாடுகளை எம்பெருமானார் நித்ய கைங்கர்ய டிரஸ்ட் செயலாளர் உமாபதி தலைமையில் செய்து வருகின்றனர்.