63 நாயன்மார்கள் 8ம் ஆண்டு விழா
ADDED :1423 days ago
சேலம்: சேலம், அம்மாபேட்டை குமரகுரு சுப்ரமணியர் கோவிலில், பன்னிரு திருமுறை மன்றம் சார்பில், எட்டு ஆண்டுக்கு முன், 63 நாயன்மார், ஒன்பது தொகை அடியார்கள், மணிவாகசகர், சேக்கிழார் ஆகிய பஞ்சலோக திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதன் எட்டாம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று, அங்கையர்கன்னி உடனுறை சொக்கநாதர் உள்ளிட்ட அனைத்து நாயன்மார்கள் திருமேனிகளுக்கும், பால், தயிர், சந்தனம், மஞ்சள், கரும்புச்சாறு உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபி ?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் மாலைகளால் அலங்கரித்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.