உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலை அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகில், நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு கங்கணம் கட்டுதல், சிறப்பு பூஜைகள் மற்றும் நாகாத்தம்மன் சுவாமி ஊர்வலமும் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு நாகாத்தம்மன் சுவாமி பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹாகும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !