உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்முறையாக 1500 அடி உயர நந்தி மலையில் கொப்பரை தீபம் ஏற்றப்படுகிறது

முதல்முறையாக 1500 அடி உயர நந்தி மலையில் கொப்பரை தீபம் ஏற்றப்படுகிறது

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள சி.என். பாளையம் நந்தி மலை கோவிலில், முதல்முறையாக 108 லிட்டர் கொண்ட கொப்பரையில் நெய் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நந்தி மலை கோவில், சி.என். பாளையத்தில் உள்ள மலை மேல், ஆயிரத்து ஐநூறு அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை மீது இருக்கும் நந்தி பகவான் திருவண்ணாமலையில் உள்ள உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையாரை பார்த்தவாறு உள்ளார். வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருநாளில் இங்கு பக்தர்கள் வழிபடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.இந்தாண்டு திருவண்ணாமலை தீபத்தன்று வரும் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, நந்தி மலை கோவிலில் முதல்முறையாக 108 லிட்டர் கொண்ட கொப்பரையில் நெய்தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அதற்காக மூன்றை அடி உயரம், இரண்டு அடி அகலத்தில் 108 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய கொப்பரை திண்டிவனத்தில் தயார் செய்யப்பட்டு,அதனை டாட்டா ஏஸ் வாகனத்தில் நேற்று கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. செல்லும் வழியில் ஏராளமான சிவனடியார்கள் கொப்பரைக்கு பூஜை செய்து கோவிலுக்கு வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !