திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை பூஜை
ADDED :1520 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி விசாக கொறடு மண்டபத்தில் தினமும் காலை, மாலை யாகசாலை பூஜை நடக்கிறது.யாகசாலையில் சத்தியகிரீஷ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி சொம்புகளில் புனிதநீர் நிரம்பி வைக்கப்பட்டுள்ளது. சத்தியகிரீஷ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், விநாயகர், அஸ்தர தேவர் விக்கிரகங்களுக்கு பூஜை நடக்கிறது. நவ., 20 காலையில் யாகசாலை பூஜை நிவர்த்தி செய்யப்பட்டு சுவாமிகளுக்கு புனித நீர் அபிஷேகம் நடக்கும்.