ஐயப்பனுக்குரிய நைவேத்யம்
ADDED :1454 days ago
ஐயப்பனுக்கு அதிகாலை பூஜையின் போது விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர், துாயநீர் என்னும் எட்டு திரவியங்களால் அபிஷேகம் செய்வர். அதன் பின் கதலிப்பழம், தேன், சர்க்கரையால் செய்த திருமதுரம் என்னும் உணவு நைவேத்யம் செய்யப்படும். தொடர்ந்து நெய் அபிஷேகம் நடத்தப்படும். உச்சிக்கால பூஜையின் போது இடித்துப் பிழிந்த பாயாசம் படைக்கப்படும். இதில் தேங்காய்ப்பால், கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் சேர்க்கப்பட்டிருக்கும். இதற்கு ‛மகா நைவேத்யம்’ என்று பெயர். கலச பூஜையின் போது அரவணை, பச்சரிசி சாதம் படைக்கப்படும். இரவு பூஜையில் அப்பம், பானகம், பச்சரிசி சாதம் இடம் பெற்றிருக்கும்.