உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரச்னைகளை சுமக்காதீர்கள்

பிரச்னைகளை சுமக்காதீர்கள்


தலைவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றார் ஜாக்சன்.
‘‘எனக்கு எப்போதுமே தலை வலிக்கிற மாதிரி ஒரு உணர்வு இருக்கு’’ என டாக்டரிடம் கூறினார்.  
‘‘உங்களுக்கு பிரச்னைகள் அதிகமா” என கேட்க, “ஆமாம் தொழிலில் பல பிரச்னைகள் உள்ளன’’ என்றார்.  
உடனே டாக்டர், அவரிடம் தண்ணீர் நிரம்பிய ஒரு டம்ளரை கையில் பிடித்திருக்க சொன்னார். சில நிமிடங்கள் ஆனபின் ஜாக்சனுக்கு கைவலிக்க ஆரம்பித்தது.  
“டாக்டர் கை வலிக்கிறது...” என்னால் பிடிக்க முடியவில்லை என்றார்.  
“பரவாயில்லை, கொஞ்சம் நேரம் பிடியுங்கள்’’ என சொன்னார் டாக்டர்.
சில நிமிடங்களுக்கு பிறகு டம்ளரை கீழே போட்டார் ஜாக்சன்.
‘‘நோய்க்கான காரணம் இப்போதாவது புரிகிறதா? எப்போதும் பிரச்னைகளை சுமந்துகொண்டே இருப்பதால், அவை உடம்பில் வலியை உண்டாக்குகிறது. பிரச்னைக்கு தீர்வு காணுங்கள். எல்லாம் சரியாகிவிடும்’’ என்றார் டாக்டர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !