ஆடம்பரம் தேவையில்லையே!
ADDED :1455 days ago
வீடுகளில் பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதன்நோக்கம் அனைவரும் ஒரே இடத்தில் சந்திப்பதுதான்.
ஆனால் தற்போது இவைகள் ஆடம்பரமாக நடக்கின்றன.
பலரை அழைப்பது பெருமை. எத்தனை பேர் வந்தார்கள் என்பதிலும் சிலர் பெருமைப்படுவர். ஆனால் அழைத்தபிறகு வந்தவர்களை கவனிக்கமுடிவதில்லை. சொல்லப்போனால் பேசுவதற்கும் நேரம் இல்லை.
அழைக்கவில்லை என நினைப்பார்களே என்று அழைக்கிறோம். போகமல் இருந்தால் ‘நல்லா இருக்காது’ என்று அழைத்தவர்கள் வருகிறார்கள்.
இதை செய்வதற்கு சிலர் கடன் வாங்குகிறார்கள். இந்நிலை மாறவேண்டும். நெருங்கியவர்களை அழைத்து அவர்களுடன் அன்பாக பேசி நிகழ்ச்சிகளை கொண்டாடுங்கள்.