மூலனூர் சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
வெள்ளகோவில்: வெள்ளகோவிலை அடுத்த மூலனூர் அண்ணா நகர், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை விமர்சியாக நடந்தது.
மூலனூர் - தாராபுரம் சாலையில் அண்ணா நகர் அருகே சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 13 ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி மூன்று கால யாகபூஜை முடிவுற்ற நிலையில் நேற்று காலை 6 மணியளவில் நான்காம் கால யாக பூஜை தொடங்கி வேத பாராயணம், தமிழ் திருமுறை பாராயணம், துவார பூஜை, ஸ்ரீ மகாசக்தி விநாயகருக்கு மூல மந்திர ஹோமம்,திரவியாஹீதி, ஸ்பர்சாகுதி, தத்வ ஹோமம், நாடி சந்தானம், உயிரூட்டுதல், இறையாற்றல் சக்தியல மந்திர மூலமாக சாமிக்கு எழுந்தருளச் செய்தல், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 9.15 க்கு யாத்திரதானம், கலசம் புறப்பாடு 9 .35 மணிக்கு சக்தி விநாயகர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தச தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மூலனூர், அண்ணாநகர், ஊர்ப் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.