கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு தடை விதிக்கக்கூடாது
ADDED :1421 days ago
திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு தடை விதிக்கக்கூடாது என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றத்தில் நவ.,19ல் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு விழா நடத்தப்பட வேண்டும். இது நீண்டகால கோரிக்கை. மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை முறையாக பராமரிக்க வேண்டும். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு தடை விதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நவ.,19ல் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.மழை வெள்ளத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். நிவாரண பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு தேவையான நிதியை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் 10 நாள்கள் நீட்டிக்க வேண்டும் என்றார்.