உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் அறங்காவலர்களாக நியமிக்க கோரி 145 விண்ணப்பம்

கோவில் அறங்காவலர்களாக நியமிக்க கோரி 145 விண்ணப்பம்

கோவை: கோவையிலுள்ள மருதமலை, பேரூர், ஆனைமலை மாசாணியம்மன் ஆகிய மூன்று கோவில்களில் அறங்காவலர்களாக நியமிக்கக்கோரி, கடைசி நாளான நேற்றுவரை, 145 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகம் வாயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி, நேற்று நிறைவடைந்தது.

நேற்று வரை மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுக்கான பதவிக்கு, 145 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.துணை கமிஷனர் அந்தஸ்திலுள்ள, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் பதவிக்கு 49 விண்ணப்பங்கள், உதவி கமிஷனர் அந்தஸ்திலுள்ள, பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு, 60 விண்ணப்பங்கள், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, 36 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், இணை, துணை, உதவி கமிஷனர் அந்தஸ்திலான கோவில்களுக்கு மட்டும் அறங்காவலர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. செயல் அலுவலர் அந்தஸ்திலான கோவில்களுக்கு, மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு வாயிலாக நிரப்பப்படும். அதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படவில்லை. பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி நாளை (இன்று) முதல் துவங்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !