உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி: திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் சதாசிவ லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் புதியதாக ஜடா முனீஸ்வரர் மற்றும் கங்கையம்மன் ஆகிய கோவில்கள் கட்டப்பட்டன.இக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, கடந்த 13ம் தேதி மாலை, கணபதி மற்றும் நவகிரக ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில், 5 யாக சாலை, 200 கலசங்கள் வைத்து மூன்று கால யாக சாலை பூஜைகள் நடந்தன.நேற்று, காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 9:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடந்தது. காலை 10:00 மணிக்கு கலச ஊர்வலம் நடந்தது. பின் மூலவர் கங்கையம்மன், ஜடாமுனீஸ்வரர் ஆகிய சன்னதிகளில் கலச நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !