உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கன்னிவாடி : கீழத்திப்பம்பட்டி விநாயகர், விஸ்வ பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவில் தன பூஜை, கோ பூஜை உள்பட யாகசாலை பூஜைகள் நடந்தன. விசேஷ வழிபாடுகளுடன் கடம் புறப்பாட்டை தொடர்ந்து, கும்பங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !