திருமலையில் கன்னட பவன் பணி முடிக்க முதல்வர் உத்தரவு
ADDED :1470 days ago
திருமலையில் நடந்து வரும் கன்னட பவன் கட்டடத்தை பார்வையிட்ட முதல்வர் பசவராஜ் பொம்மை, விரைவில் முடிக்கும்படி உத்தரவிட்டார்.இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக, முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் திருப்பதி சென்றிருந்தார்.அங்கு நடந்த தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார். அங்கேயே தங்கிய முதல்வர், நேற்று அதிகாலை வெங்கடேஸ்வர சுவாமி தரிசனம் செய்தார்.திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறக்கட்டளை தலைவர் சுப்பாரெட்டி கவுரவித்தார்.கர்நாடக அரசு சார்பில் நடந்து வரும், கன்னட பவன் கட்டட பணிகளை பார்வையிட்டார். 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இப்பணிகளை விரைவில் முடிக்குமாறு உத்தரவிட்டார்.சுகாதார துறை அமைச்சர் சுதாகர் உட்பட பலர் சென்றிருந்தனர்.சிறப்பு விமானம் மூலம் முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்று பெங்களூரு வந்தார்.