பழநியாண்டவருக்கு சீர் கொண்டு வந்த பக்தர்கள்
ADDED :1422 days ago
பழநி: பழநி ஆண்டவருக்கு பெரிய காலணியுடன் கரூர் பக்தர்கள் சீர் கொண்டு வந்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் விதவிதமாக நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர் பொதுவாக காவடி எடுத்து அலகு குத்தி வருவது வழக்கம். கரூரைச் சேர்ந்த 200 குடும்பத்தினர் பெரிய காலணி உடன் முருகனுக்கு சீர் கொண்டு வந்தனர். இதில் முருகப்பெருமான் கனவில் வந்து சொல்வதால் சீர் எடுத்து வருவதாகவும், தெய்வானை உறவு முறையாக இருப்பதால் முருகனுக்கு சீர் கொண்டு வருவது ஐதீகம் என்றனர். இதற்காக சிறப்பாக காலணி தயாரித்து சீர் பொருட்களைக் தலையில் சுமந்து கும்மியடித்து, மேளதாளங்கள் முழங்க கிரி வீதி சுற்றி வந்து மடத்தில் பூஜைகள் முடித்து பின் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.