உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்களில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்களில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், ஆண்டாள் கோயில்களில் தருமபுர ஆதீனம் வழிபாடு செய்தார். கடந்த நவ. 10 முதல் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குரு லிங்க சங்கம ஞான ரத யாத்திரையை தென்மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 5:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருகை தந்தார். குருஞானசம்பந்தர் மன்றத்திலும், அவதார தலத்திலும் பத்தர்களுக்கு ஆசி வழங்கினார். பின்னர் ஆண்டாள் கோயில் மற்றும் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். ரகு பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பின் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். விழாவில் மன்ற நிர்வாகி முனியப்பன், கோவில் செயல் அலுவலர்கள் ஜவஹர் மற்றும் இளங்கோவன், கோவில் பட்டர்கள், பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !