கல்பாத்தி தேர்திருவிழா: பாலக்காட்டில் ரத சங்கமம்
பாலக்காடு: பாலக்காடு கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற தேர்திருவிழா சங்கம் நேற்று நடந்தது. கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில், தேர்த் திருவிழா கடந்த 14ல் துவங்கியது. முதல் நாள் விழாவில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி, சுப்பிரமணியர் விநாயகர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நான்கு வீதிகளிலும் பவனி வந்தனர். இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மந்தக்கரை மகாகணபதி கோவில் திருத்தேரோட்டவும் நடைபெற்றன.
நேற்று காலை பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவிலிலும் ரதோற்சவம் நடந்தது. நேற்று இரவு மாலை லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தேர், சாத்தபுரம் பிரசன்ன கணபதி கோவில் தேர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர்கள் அனைத்தும், கல்பாத்தி தேர்முட்டியில் சங்கமித்தன. வண்ண விளக்கு ஒளியில் ஜொலித்த தேர்களின் சங்கமம் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணம் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நடந்ததால் பக்தர்களின் கூட்டமின்றி நடந்தன. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கும், உப தேவதைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இத்துடன் மூன்று நாட்களாக காலபாத்தியில் கொண்டாடப்பட்ட திருத்தேர் உற்சவம் நிறைவடைந்தது.