உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே திருவெற்றியா கழுகூரணி கிராமத்தில் காமாட்சி அம்மன், பூர்ண புஷ்கலா தேவி சமேத அய்யனார், கருப்பண்ணசாமி, நாகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த நவ., 13 அன்று காப்பு கட்டுதலுடன் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 10 மணி அளவில் கோயில் விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பின்னர் மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், கழுகூரணி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !