உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் திருக்கார்த்திகை விழா: இன்று பரணி தீபம்

பழநியில் திருக்கார்த்திகை விழா: இன்று பரணி தீபம்

பழநி: பழநி மலைக்கோயிலில் நாளை திருக்கார்த்திகை விழா நடைபெற உள்ளது. பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா நவ.14 அன்று சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை விழா துவங்கியது. இன்று (நவ.18) மாலை பரணி தீபம் ஏற்றுதலும, திருக்கார்த்திகை தினமான நாளை (நவ.,19) மாலை 4:45 மணிக்கு சின்னகுமாரசாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருள்வார். மாலை 5:30 மணிக்கு பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும், சொக்கப்பனையும் ஏற்றுதலும் நடைபெறும். மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில்களில் மகா தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறும். கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்கார்த்திகை திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்கள் அனுமதி இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !